Thursday, June 17, 2010

திருமணநாள் பரிசு



எத்தனை பொய்களடி ஆருயிரே!
எத்தனை பொய்களடி!
ஆசையை உரைத்தது மட்டும் உன் கணவன்.
அழகாய் தேர்ந்தெடுத்தது மாமி மற்றும் மாமன்.
வருவாய் என்று வரவேற்ற மாமியாரும் உடந்தை;
ஊட்டி வளர்த்த தாயாரும் அறிந்திருக்கலாம் ஒரு கை.
நட்சத்திரம் தூரம் இருந்த ஒன்றை
கண்விழி அருகில் கொண்டு வர உடன்பிறந்தவன்!
அண்ணன் ஒருவன் கொண்டு வந்தான்,
மற்றொருவன் கண்டு மகிழ்ந்தான்.
உறவினர்கள் கிழங்கை மறைத்தனர் என்றால்,
நண்பர்கள் பூசணியை மறைத்தார்கள் சோற்றில்.
ஒரு நாள் இரு நாள் இல்லையடி -
பல நாள் நடந்ததடி இந்த அரங்கேற்றம்.
பாதி ரகசியம் தெரிந்துவிட
மீதி மறைக்க மற்றொரு பொய்.
அது மட்டும் போதாது என்று
முற்றிலும் மறைக்க மேலும் ஒரு பொய்.
கதை, திரைக்கதை எழுதி இயக்கவும் செய்தால்,
உண்மை அறிந்தேன் உன்னைக் கண்டு!

இவ்வைரக்கல்லும் வெறும் கல்லாகிவிடும்
அதனை அணிந்தவுடன் வரும் உன் புன்னகையாலே!

Friday, June 4, 2010

தலைமுடிவேண்டுகோள்

காக்கைக்கும் தன்குஞ்சு
பொன்குஞ்சு என்பதனாலோ
காடுமாதிரி திரிகிற என்முடியை
கட்பண்ண மனமில்லை என் கண்மணிக்கு